shopify analytics ecommerce
tracking

Aishwarya Rajesh to romance with Vijay Devarkonda | விஜய் தேவரகொண்டா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

By Pakka Admin - Oct 10,2018


Aishwarya Rajesh to romance with Vijay Devarkonda | விஜய் தேவரகொண்டா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்திருந்த இவர், விரைவில் வெளியாக உள்ள வட சென்னை படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், முதன்முதலாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். நோட்டா பட நாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கிறார் ஐஸ்வர்யா. இவருடன் ராஷி கண்ணாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். அடுத்தவாரம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. ரொமான்ட்டிக் கதையில் இந்தப்படம் உருவாகிறது.

 

Related Videos